சேவல் விருத்தம் - 2

மோகனம் - கண்ட சாபு
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும் ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை ஈனப் பசாசு களையும் கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கட் கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர் கரத் தடர்த்துக் கொத்துமாம் தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி சமணர் கிடு கிடென நடனம் தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய சரண அழகொடு புரியும் வேள் திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள் தெரியும் அரன் உதவு குமரன் திமிர தினகர முருக சரவண பவன் குகன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 2 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போலவும், பசாசு, துவஜமே, கிடு, புரியும், வந்த, குமாரக், பிசாசுகள், உடைய, சேவற், திருத், குகன், செய்யும்