சேவல் விருத்தம் - 1

கம்சத்வனி - கண்ட சாபு
உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல உரிய பர கதி தெரியவே உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள்மிடி கெட அருளியே கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்றா டுமாம் மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன் மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற வரிசையின மகள் அவளுடன் சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண சிறுவன் அயன் வெருவ விரகிற் சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 1 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, இடஞ்சல்கள், இரண்டும், வறுமை, உடைய, மிகுந்த, பெருமானின், சேவற்திருத், நெறு, மலைகள், வெகு, அறுமுகவன், உலகில், முருகப்