சேவல் விருத்தம் - காப்பு

காப்பு
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற் செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான் திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே (முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - காப்பு - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பரமன், துணையாமே, வரும், சிறப்பு, வாய்ந்த, உள்ள, முக்கட், ராவணன், லிங்கம், வைத்த, வினாயகன், குமரன்