மயில் விருத்தம் - 7 - மயில் விருத்தம்

பீம்பலாச் - கண்ட சாபு
தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும் ஜகதலமு நின்று சுழல திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை தீக் கொப்புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம் பதைபதைத்தே நடுங்க படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சை ப்ரவாள மயிலாம் ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த்த கலசக் கொங்கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர மானந்த வல்லி சிறுவன் கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குருதரு திருத்தணிகை வேள் கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி குடிபுகுத நடவு மயிலே (பச்சை ப்ரவாள மயிலாம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
7 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பச்சை, மயிலாம், கொடிய, ப்ரவாள, நிறத்தையும், உடைய, மயிலே, வல்லி, மேல்