கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
|
சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற் சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே. |
33 |
அழகிய, திருமுலைப் பால் ஊட்டி, பெரும் பாக்கியமாய் கிடைத்த, என் ஐயன், என்றெல்லாம், பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற, குழந்தை, நீங்காமல் வசிக்கின்ற, சிவந்த காலை உடைய, அன்னப்பட்சிகளும், நூலோடுகூடிய, ஆம்பல்களும், நிறைந்திருக்கின்ற, திருச்செந்தூரை, தியானிப்பாயாக, அறிவின்மையால், தங்கள், சமயக் கோட்பாடுகள், என்று உணராத, திருந்தி உழலும் பரசமய கூட்டத்தை விட்டு, மனமே, சேது முதலாகிய, மற்றும் அநேக சமுத்திரங்களையும் நதிகளையும், போய் ஸ்நானம் செய்து, உழல்கின்ற வேலையை, விட்டு, (சேந்தூர் கருது). ..
|
திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத் திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத் திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால் திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே. |
34 |
மாறுதல் இல்லாதவனே, ராத்திரி, பகல், சமுத்திரம், பூமி, விண்ணுலகம், இவைகளை எல்லாம் மும்மூர்த்திகளில் முதல்வனாய் நின்று படைத்தவரும், கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவரும், கைலாய நாதரும், ஆரவாரம் மிகுந்த, ஆனந்த நடனம் செய்பவருமாகிய சிவபெருமானுக்கும், அவரின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும், இமயமலையில் உற்பவித்த, தாயாகிய பார்வதிக்கும், மகிழ்ச்சியைத் தரும், புதல்வனே, செந்தில் பதியானே, குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன் எண்ணற்ற முறை சுற்றி வரும், என் உள்ளத்தை, மாற்றி அமைதியைத் தந்தருள்க. ..
|
திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே. |
35 |
துளசிமாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன், போட்டி போடுகின்ற, மாலைக்காலத்தோடு, விண்ணிலிருந்து, மழை விடாமல் பெய்கிறது, சங்கு கூட்டங்கள், வசிக்கின்ற, சமுத்திரம், இடை வெளி இல்லாமல் முழங்குகின்றது, இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்மறந்து இருக்கும் என் மனதை, ஆறுதல் புரிவதற்கு, உரியவர் யார்? பெற்ற தாயும், செந்தில் பதியைப் போல் இருக்கிறாள், சிவந்த மேனியில், எலும்பு மாலையும், உதிர்கின்ற விபூதிப் பொடியும் படிய, நீண்ட, ஜடாபாரத்தை உடைய பரமசிவன், குமாரனே, இனிமேல் என்னால் இந்த விரக தாபம் தாங்க முடியாததால், உன் வெட்சி மாலையை எனக்கு தந்தருள வேண்டும். ..
|
செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச் செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச் செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. |
36 |
வெட்சி மாலை தரித்திருப்பவனே, தாவிப் பாய்கின்றதும், சர்ப்பங்களிடத்தில் பகையும், கூர்மை பொருந்திய, வலிய, வாயினிடத்தில், பாம்பை வைத்துக் கொண்டு, சிவந்த, மலையின் கண், அதனுடைய உயிரை உண்ணுகின்ற, மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த கரத்தில், இந்த வெப்பமான அக்னிப் பொரியை ஏந்திக் கொண்டு, சரவண தடாகத்தில் கொண்டு போய் விடு, என்று சொல்ல (அங்கு உற்பவித்த), பாலகனே, உன்னுடைய திருவடிகளை நாங்கள் அடையும்படி, செய்வாயாக இகழ்ச்சிக்கு இடமான, ஐம்புல ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை, இனி மேல் நமக்கு வேண்டாம், செல்வம் அதிகரித்தாலும் (இனி அலம்) ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திரிகையி, சேதனந், திருத்துள, வாவி, செச்சைய, சிவந்த, தந்துறை, கொண்டு, லாயிர, வரும், பரமசிவன், உன்னுடைய, வெட்சி, உற்பவித்த, உடைய, வசிக்கின்ற, விட்டு, போய், செந்தில், சமுத்திரம், சுற்றி