கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்

சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. |
7 |
துன்பமாகிய கயிற்றினால் கட்டப்பட்டு மூடத்தனமான காரியங்களைச் செய்து மீண்டும் வினைப் பயனைத் தேடிக்கொண்டு பரிதவிக்கின்ற அடியேனுடைய மனத்தில் உள்ள மயக்கத்தை நீக்கி அருள்வீராக! வெற்றி நிறைந்த போர்க்களத்தில் அவுணர்களின் மார்பிலிருந்து பெருகிய இரத்தக்குளத்தில் பேய்கள் குதித்து முழுகி ஆனந்தமடைந்து அந்த இரத்தத்தைக் குடித்து அகங்கரித்து நடனம் ஆடும் படி வேலாயுதத்தை அந்த அவுணர்கள் மீது ஏவிய இறைவனே!
ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. |
8 |
அருட்பெருஞ்சோதியில் உண்டாகிய உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியிலே, தனிப் பெருங்கருணையால் உண்டாகிய ஒப்பற்ற சிவா நந்தத் தேனை மிகவும் பழைய காலத்திலேயே கட்டு நீங்கிய வெட்ட வெளியில் உண்டாகிய ஒன்றுமில்லாத ஒன்றை தன்னிடத்தில் பெற்றுள்ள தன்னந்தனிமையான நிலையை அடியேன் தெளிவடைந்து உய்யுமாறு உபதேசித்து அருளிய ஆறுமுகங்களையுடைய திருமுருகப் பெருமானே!
தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. |
9 |
தேன் என்றும் கற்கண்டு என்றும் ஒப்புமை சொல்வதற்கு இயலாத இனிய மொழியை உடைய தெய்வ மடந்தையாகிய வள்ளி நாயகியாரது கணவராகிய திருமுருகப் பெருமான் அடியேனுக்குக் குருவாக வந்து உபதேசித்து அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. [அஃது] ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. [அஃது, ஒன்றும் அற்ற ஒன்று].
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. |
10 |
இத்தன்மைத்து என்று அளவிட்டு கூறுவதற்கு இயலாத, மனம் வாக்கு முதலியவற்றை இழந்து அசைவின்றி பேசாமல் சும்மாயிருக்கும் அநுபூதியான எல்லைக்குள்ளே புகுமாறு அடியேனைச் செலுத்தி அருளியவரே, போர் புரியும் வேலினை உடையவரே, கொல்லிப்பண்ணை ஒத்த இனிய மொழிகளையும் கோவைப்பழத்தை ஒத்த சிவந்த இதழையும் உடையவருமான வள்ளி நாயகியாரை மருவுகின்ற பெருமை பொருந்திய மலைபோன்ற புயங்களை உடைய திருமுருகப்பெருமானே!.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அன்று, வள்ளி, உண்டாகிய, இயலாத, ஒத்த, இனிய, உடைய, என்றும், ஒன்று, அஃது, தெய்வ, நந்தத், விளைந்த, தேனை, உபதேசித்து, திருமுருகப், அருளிய, அந்த