கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்

தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப் பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. |
3 |
தேரை அலங்கரித்துச் செலுத்தி, "ஆணவம், மாயை, கன்மம்" என்னும் மூன்று கோட்டைகளைத் தம் திருப்பார்வையினாலேயே எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப் பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள் பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணிவகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது. சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்கள் வதியும் அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.
ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான் சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக் கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. |
4 |
[ஐம்புலன்களாகிய] ஐவர், தேவரீரின் திருவடிப்பெருமைகளை ஆராய விடமாட்டார்; ஒரே பரம்பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டார்; நறுமணமிக்க மலர்களால் அருச்சித்து தேவரீரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சென்றடைய விடமாட்டார். அடியேன் என்ன செய்வது? அமரர்கள் உய்யவேண்டி, திருட்டுத்தனமும் கொடூரமும் பொருந்திய சூரனை, அவனுடைய கரிய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அழித்தவரே!.
திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. |
5 |
அழகிய உலகங்கள் யாவையும் பெற்று அருளிய பொன்னிற உமா தேவியின் ஞானப் பாலைப் பருகிய பின்னர், சரவணத் தடாகத்தில் உள்ள தாமரை மலர்த் தொட்டிலில் ஏறி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு செவிலியர் பாலையும் உண்ண விழையவே, கடல் அழவும், கிரௌஞ்ச மலை அழவும், சூரபன்மன் அழவும், தானும் விம்மி விம்மி அழுத இளங் குழந்தையை உலகமானது குரிஞ்சிக் கிழவன் என்று சொல்லும்!.
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. |
6 |
பசுமையுடைய பெரிய தினைப் புனத்தில் சிறிய தினைக் கொல்லையைக் காவல் செய்யும் [ஜீவான்மாவாகிய] வள்ளியம்மையை விரும்புகின்ற திருமுருகப் பெருமானை உண்மையான அன்புடன் மெல்ல மெல்ல நினைக்க, அந்த நினைப்பினால் ஒப்பற்ற பேரின்பத்தை அடியேன் துய்த்து, அதன் இனிமையை உணர்ந்த பொழுது இனிய கரும்பும் துவராகி, செவ்விய தேனும் புளித்து மிகவும் கசந்து விட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விடமாட்டார், அழவும், நினைக்க, மெல்ல, தாமரை, அடியேன், விம்மி, தேவரீரின், தேனும், பெரிய, உள்ள, திருமுருகப், அருளிய, கூர்மையான, கிரௌஞ்ச, பின்னர், அழிந்தது, செலுத்தி