டெல்லி சுல்தானியம்
இல்துத்மிஷ் தனது புதல்வி ரசியாவை அரியணைக்கு வாரிசாக நியமித்திருந்தார். ஆனால் டெல்லியின் காஸி மற்றும் வாசிர் இருவரும் ருக்னுதுதீன் பிரோஸ் என்பவரை அரியணையில் அமர்த்தினர். முல்தானில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்குவதற்கு ருக்னுதீன் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட ரசியா டெல்லியின் அமீர்கள் ஆதரவோடு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டார். அபிசீனிய அடிமையான யாகூத் என்பவரை குதிரைப் படைத் தலைவனாகவும் நியமித்தார். ஆணுடை தரித்து அரசவையில் ரசியா அமர்ந்தார். வேட்டைக்குச் செல்வது படைநடத்துவது உள்ளிட்ட செயல்களிலும் ரசியா ஈடுபட்டார். இதனைக் கண்டு துருக்கிய உயர்குடியினர் வெகுண்டனர். 1240 ஆம் ஆண்டு அல்தூனியா என்ற படிண்டாவின் ஆளுநர் ரசியாவுக்கெதிராக கிளர்ச்சியிலீடுபட்டார். ரசியா தானே படைநடத்திச் சென்று கிளர்ச்சியை நசுக்க முற்பட்டார். ஆனால் அல்தூனியா யாகூத்தைக் கொன்று ரசியாவை
![]() |
ரசியா |
ரசியாவின் வீழ்ச்சி நாற்பதின்மர் குழுவின் எழுச்சிக்கு வழிவகுத்தது. அடுத்த ஆறு ஆண்டுகள் பஹ்ரம் மற்றும் மசூத் இருவரும் டெல்லியை ஆண்டனர். சுல்தான்களுக்கும் உயர்குடியினருக்குமிடையே பூசல்கள் தோன்றின. 1246ல் பால்பன் இல்துத்மிஷின் இளைய மகனான நசிருதீன் முகமதுவை சுல்தானாக நியமித்தார்.
பால்பனது ஆட்சிக்காலம் (1246 - 1287)
உலுக்கான் என்றழைக்கப்பட்ட பால்பன் சுல்தான் நசிருதீன் முகமதுவின் நாயப் அல்லது அரசப்பிரதியாக செயல்பட்டார். தனது மகளை சுல்தானுக்கு மணமுடித்துக் கொடுத்து அவரது வலிமையையும் பெருக்கிக் கொண்டார். ஆட்சித்துறையை பால்பன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும் அரசவையில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. அவற்றை அவர் சாமர்த்தியமாக முறியடித்தார். 1266ல் நசிருதீன் முகமது வாரிசு ஏதுமின்றி இறந்துவிடவே பால்பன் அரியணையேறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , ரசியா, வரலாறு, டெல்லி, பால்பன், இந்திய, என்பவரை, நசிருதீன், சுல்தானியம், இல்துத்மிஷின், துருக்கிய, அல்தூனியா, அவரது, அரசவையில், பஹ்ரம், மகனான, அமர்த்தினர், ரசியாவை, தனது, இந்தியா, டெல்லியின், இருவரும், கொண்டார், சென்றார், அரியணையில், நியமித்தார்