');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
அரசப் பிரதியாக செயல்பட்ட அனுபவம் பால்பனுக்கு டெல்லி சுல்தானியத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள ஏதுவாயிற்று. நாற்பதின்மர் குழுவிலிருந்த உயர்குடியினரே தமக்கு எதிரிகள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். சுல்தானின் அதிகாரத்தையும் மதிப்பையும் கூட்டுவதன் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்மினார். பால்பனது கருத்துப்படி 'அரசன் இறைவனது நிழல் போன்றவன்', 'இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன்'. எனவே, பால்பன் தீவிரமான அரசவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். கல்தான் முன்பு மண்டியிட்டு வணங்கி காலைத்தொட்டு முத்தமிடுதல் என்ற வழக்கத்தை பின்பற்றச் செய்தார். இதனால் உயர் குடியினரைவிட சுல்தான் உயர்ந்தவர் என்பது உணர்த்தப்பட்டது. தனது செல்வத்தையும் வலிமையையும் உயர்குடியினருக்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவையும் ஆடம்பரமாக அவர் கொண்டாடினார். துருக்கிய உயர்குடியினரின் நலன் நாடுபவராக அவர் திகழ்ந்தார். பிற உயர்குடியினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை அவர் வழங்கவில்லை. உயர்குடியினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒற்றர்களையும் பால்பன் நியமித்தார்.
|
கியாசுதீன் பால்பன் |
துருக்கிய உயர்குடியினர் இடம் பெற்றிருந்த நாற்பதின்மர் குழுவை ஒழிக்க அவர் முடிவுசெய்தார். தனக்குக் கீழ்ப்படிந்தவர்களை மட்டும் விட்டுவிட்டு பிறரை ஒழித்துக் கட்டினார். பதுவான் மாகாண ஆளுநரான மாலிக் பக்பக் என்பவரை அவரது பணியாளர்களைத் துன்புறுத்தினார் என்ற காரணத்திற்காக பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுத்தார். அயோத்தியின் ஆளுநரான ஹேபத்கான் குடிபோதையிலிருந்தவனைக் கொன்றான் என்ற காரணத்துக்காக தண்டித்தார். படிண்டாவின் ஆளுநர் ஷெர்கான் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். பால்பன் தனது அரசை விரிவுபடுத்துவதற்குப் பதில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தார். மேவாடிஸ் என்ற கொள்ளையர்களால் டெல்லியின் புறநகர் பகுதிகள் அடிக்கடி சூறையாடப்பட்டன. பால்பன் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்து கொள்ளைகளைத் தடுத்தார். கொள்ளையர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். இதனால் பயணம் செய்வோருக்கு சாலைகள் பாதுகாப்புமிக்கதாகத் திகழ்ந்தன.
1279 ஆம் ஆண்டு வங்காள ஆளுநர் துக்ரில்கான் பால்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. வடமேற்கு இந்தியாவில் மங்கோலியர்கள் மீண்டும் படையெடுத்து வந்தனர். பால்பன் தனது மகன் இளவசரன் முகமது தலைமையிலான படைகளை மங்கோலியருக்கெதிராக அனுப்பி வைத்தார். ஆனால், முகமது போரில் கொல்லப்பட்டார். இந்நிகழ்ச்சி பால்பனுக்கு துயரத்தைக் கொடுத்தது. 1287ல் பால்பன் இறந்தார். டெல்லி சுல்தானியத்தின் எழுச்சிக்கு பால்பன் ஆற்றிய பங்கு மகத்தானது. முடியாட்சியின் வலிமையை அவர் பெருக்கினார். இருப்பினும் மங்கோலியப் படையெடுப்புகளிலிருந்து இந்தியாவை அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை.
பால்பன் மறைந்தவுடன் அவரது பேரன்களில் ஒருவரான கைக்குபாத் டெல்லி சுல்தானாக நியமிக்கப்பட்டான். அவனது நான்கு வருடகால திறமையற்ற ஆட்சிக்குப்பின் 1290 ஆம் ஆண்டு டெல்லி அரியணையை ஜலாலுதீன் கில்ஜி கைப்பற்றினார்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->