மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

பல் வகைக் கொடிகள்
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப | 360 |
மாகா லெடுத்த முந்நீர் போல முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக் கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை |
மதுரைத் தெருக்களில் மகிழ்ச்சியுடன் பாடி ஆடினர். அவர்களின் களிப்பு ஆரவாரம் கடலில் காற்றுஅடிக்கும்போது அலை எழுப்பும் ஆரவாரம் போல் இருந்தது. முரசு முழக்கும் ஓசை, குளம் வெட்டியது போல் வாயகன்ற இசைக்கருவிகளைத் தட்டுவதால் ஒலிக்கும் இசை, இவற்றைக் கேட்டு மகிழ்ந்து ஆடிப்பாடும் ஆரவாரம், ஆகியவை தெருக்களில் கேட்டுக்கொண்டேயிருந்தன.
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச் | 365 |
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு . புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப |
370 |
புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப் பெருவரை மருங்கி னருவியி னுடங்கப் |
மதுரை நியமங்கள் வரையப்பட்ட ஓவியம் போல வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்தன. முருகனுக்குச் சேவல் கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி போன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம் அரசன் ஒவ்வொரு நாட்டையும் வெல்லும்போதெல்லாம் அந்த நாட்டின் அரசனைக் கொண்டுவந்து தங்கவைத்த மாடங்களில் பறக்க விடப்பட்ட அந்தந்த நாட்டுக் கொடிகள். நாள்தோறும் நடக்கும் விழாவுக்காக அன்றாடம் புதிது புதிதாக ஏற்றப்பட்ட கொடி. வென்ற நாட்டின் அடையாளமாக அங்கிருந்து கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்ட கொடிகள். கள் விற்குமிடம் இது என்று அடையாளம் காட்டும் கொடிகள். பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும் கொடிகள். இப்படி எங்கும் பறக்கும் கொடிகள் மலைமேல் ஆடும் அருவி போல் ஆடிப் பறந்தன. .
நால் வகைப் படைகளின் இயக்கம்
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் | 375 |
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன் கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து |
380 |
கோலோர்க் கொன்று மேலோர் வீசி மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக் கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும் |
கடலில் ஆடும் நாவாய் போலக் கட்டுத் தறியில் ஆடும் களிறுகள். பருத்த மீன்கள் வந்துபோகும் கடல். சங்குகள் மேயும் கடல். கப்பலில் பாய்மரம் கட்டிய கயிறு அறுந்து ‘இதை’ என்னும் பாய் காற்றில் பறக்கும் போது ,நாவாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலிலுள்ள கல்லில் மோதிச் சூறாவளிச் சுழலில் அகப்பட்டுச் சுழலும் நாவாய் போல, இருபுறமும் மணி ஆடி அடித்துக்கொண்டு செல்லும்போது கையில் அங்குசக் கோலைக் கொண்டிருக்கும் தன் பாகனைக் கொன்றுவிட்டு தன்மேல் அமர்ந்திருப்போரை வீசி எறிந்துவிட்டு, தன்னைப் பிணித்துள்ள சங்கிலித் தொடரைச் சற்றும் பேணாமல், கட்டியிருக்கும் தூணைச் சாய்த்துவிட்டு வெளியேறும் களிறு தெருவில் செல்லும். (போருக்கு இட்டுச் செல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் யானை இப்படிக் கட்டுக்காவல் மீறி வெளிப்பட்டுத் திரிந்தது.)
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் |
385 |
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங் |
ஞாயிற்றின் ஊறல்கண் கூசும்படி வெள்ளை நிறம் கொண்ட அன்னம். செங்கால் அன்னம். அது வானம் புதையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு விண்ணில்தாவிப் பறப்பது போல், செந்நிறக் குதிரைகள் இழுத்துச் செல்வதால் வெண்ணிறத் தேர்கள் பறந்தன. பறக்கும் திறன் குறைந்த அன்னம் பறப்பது போல் – இல்பொருள் உவமை
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடிபடு மண்டிலத் தாதி போகிய |
390 |
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும் |
குதிரை வீரர் சவுக்குக் கோலுடன் குதிரைமேல் அமர்ந்துகொண்டு தாக்கச் செல்லும் திசையைக் காட்டினர். முதுகில் சேணவளையல் அணிந்திருந்த அந்தக் குதிரைகள் அவன் காட்டிய வழியில் ‘ஆதி’ நடை போட்டுக்கொண்டு சென்றன.
வேழத் தன்ன வெருவரு செலவிற் கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும் அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற் |
நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் | 395 |
‘புழல்வல்சி’ என்பது குழாய்ப் புட்டு. வீரக்கழல் அணிந்த போர் மறவர்களுக்குப் புழல் வல்சி உணவு வழங்கப்பட்டது. (நினைவு கூர்க - பிட்டுக்கு மண் சுமந்த கதை) களமர் என்னும் சொல் உழவரைக் குறிக்கும். ‘கள்ளார் களமர்’ என்பது கள்ளுண்டு போர்க்கள உழவு செய்யும் வீரர்களைக் குறிக்கும். இருசார் படைகளும் கலந்து தாக்கிப் போரிட்டன. போரில் அவர்கள் நிகழ்த்திய செயல்கள் அரியனவும், பெரியனவுமாக அமைந்திருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, கொடிகள், போல், இலக்கியங்கள், பல்வேறு, நாவாய், பறந்தன, குறிக்கும், மதுரைக்காஞ்சி, பறக்கும், அன்னம், ஆடும், கொடி, தன்ன, ஆரவாரம், பத்துப்பாட்டு, காற்றில், என்னும், என்பது, கடல், செல்லும், செங்கால், களமர், பறப்பது, வீசி, குதிரைகள், போல, சேவல், அந்த, கடலில், கொன்று, தெருக்களில், நாட்டின், தெடுத்த, காட்டும், அடையாளம், ஏற்றப்பட்ட, சங்க