திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
கரவில் வளமலைக் கல்லருவி நாட! உரவில் வலியா ஒரு நீ - இரவின் வழிகள்தாம் சால வரஅரிய வாரல் இழிகடா யானை எதிர். |
11 |
பழுதில்லாத வளங்களையுடையகல்லருவி நாடனே! வலிய வில்லே நினக்கு வலியாய்ஒருநீ இரவின் கண்ணாகத் துணையின்றி வழிகள் தாம்மிகவும் வரவரிய; இழியாநின்ற கடாத்தையுடைய யானைகளின்எதிர்வாரல்.
வேலனார் போக மறிவிடுக்க வேரியும் பாலனார்க்கு ஈக பழியிலாள் - பாலால் கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்கு அல்லால் நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. |
12 |
வெறியைவிட்டு வேலனார்போக; மறியையும் விடுக்க; கள்ளையும் அக்கள்ளினைநுகர்வார்க் கீக; இப்பழியிலாதாள் ஊழ்வலியாற்கடும்புனலுட் பாய்ந்து நீந்தித் தன்னை யெடுத்துக்கரையின்கண் வைத்தாற் கல்லது நெடிய வேய் போன்றதோளை நல்காள் இறந்து நின்று.
ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள் ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால் கைவாய நாதும்சேர் காடு. |
13 |
ஒரு மலைபோல எல்லாமலையும் தம்முள் அளவொக்க உயர்ந்து சூழ்ந்த அரியஎல்லையுள் உள்ள தாம் எங்கள் சீறூர்; நீ வரும் அவ்வெல்லையுள்உள்ளகத்தின்கண் உள்ளன ஐந்துவாயையுடைய நாகங்கள்;புறத்துள்ளன ஆராயுங்காற் கையொடுசேர்ந்த வாயையுடையயானைகள் சேர்ந்த காடுகள்.
வருக்கை வளமலையுள் மாதரும் யானும் இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக் கடாஅமால் யானை கடிந்தானை அல்லால் தொடாஅவால் என்தோழி தோள். |
14 |
வருக்கைப் பலாவினையுடையவளமலையின் கண் மாதரும் யானும் எமக்கிருக்கையாகியபரண்மேலேயிருந்தேமாக, பெரிய கையினையுங் கடாத்தையும்பெருமையையும் உடைய யானையைத் துரந்து கடிந்தானை யன்றித்தீண்டாவால், என்றோழியுடைய தோள்கள்.
வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. |
15 |
(பழையவுரை)தள்ளாத சான்றாண்மையையுடையார் வரவை எதிர்கொண்டிராய்க் கோடாது உடம்பட்டுநீர் கொடுப்பினன்றித் தளராத அழகும் முலையும் என்னும்இரண்டிற்கும் முந்நீராற் சூழப்பட்ட வுலகும் விலையாமோநிரம்பி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நூற்றைம்பது, திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், யானும், மாதரும், சீறூர், முலையும், கோடாது, கடிந்தானை, அல்லால், சங்க, இரவின், யானை, நின்று, சூழ்ந்த