திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
மானீல மாண்ட துகில்உமிழ்வது ஒத்தருவி மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம் காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர ஆயுமோ மன்றநீ ஆய். |
6 |
மிக்க நீலமணிவரைமாட்சிமைப்பட்ட வெண்டுகிலை யுமிழ்வதுபோல,அருவிகள் மயங்காநின்ற நீல மால்வரை நாடனே!கேளாய்; கரிய நீல மலர்களை வெகுளா நின்ற வேல்போன்றகண்ணாள், செறிந்த இருளின்கண் நீவர, நினக் கிடையூறில்லாமைஆராய வல்லளோ? உண்மையாகப் பாராய்.
கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர் நன்மலை நாட! இரவரின் வாழாளால், நன்மலை நாடன் மகள். |
7 |
மிளகு படர்கின்றபூஞ்சாரலின்கட் கையையுடைய நாகங்களைப் பார்த்துவழயின்கண் வளர்கின்ற பெரும்புலிகள் திரிதரும்இரவின்கண் நீ வரின், தளிர் வளர்கின்ற நன்மலைநாட! நன்மலைநாடன் மகள் வாழாள்.
அவட்காயின் ஐவனம் காவல் அமைந்தது இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின் எண்ணுளவால் ஐந்திரண்டு ஈத்தான்கொல் என்னாங்கொல் கண்ணுளவால் காமன் கணை. |
8 |
அவ்விடத்து வருவேனாயின்நினக்கு ஐவனங்காவ லமைந்தது; இவ்விடத்தின்கண்வருவேனாயிற் செந்தினையுஞ் செறிந்த பசுந்தினையும்காத்தலே அமைந்தது; ஆதலான் எனக்கொரு மறுமாற்றந்தருகின்றிலை; நின்றோழியாகிய இவட்காயில், காமன்அம்பு ஐந்தெண்ணுளவால்; அவற்றுள் இரண்டம்பினைக்கண்ணாகக் கொடுத்தான் கொல்லோ! நின்றோழிக்குக் கண்கள் காமன்கணை யுளவால்; என்னுயிர்க்குஎன்னாங் கொல்லோ?
வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்து அன்றுஎன் வலங்கொண்டாள் கொண்டாள் இடம். |
9 |
மாயமே யென்று சொல்லப்படுந்தன்மைத்தால்! ஒரு மாவினை வினாவி யான் நினைவினைநீங்கித் தனியே எளியேனாய்ச் சென்றேன்: சென்றவிடத்துநலங்கொண்டு நிறைந்த பூங்குழலை யுடையாள் மிகவுந்தன்னாயத்தின்கண் அன்று என் வென்றியை யெல்லாங்கொண்டுஎன்னேஞ்சத்தைத் தனக்கிடமாய்க் கொண்டாள்.
கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல் தேன்வார்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ வான்தேவர் கொட்கும் வழி. |
10 |
கருவிரலினையுஞ்செம்முகத்தினையும் வெண்பல்லினையுமுடைய சூன்மந்திதன் பெரிய விரலானே பைஞ்சுனையினீரைத் தூவி,பெருவரையின் மேலே வைத்த தேன்பொதிகளைத் தேவர்கட்குக்கொடுக்கும் மலைநாடனே! வாரா தொழிவாயாக; தேவர்கள்திரிதரும் வழியாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நூற்றைம்பது, திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், அமைந்தது, வளர்கின்ற, மகள், கொண்டாள், கொல்லோ, இவட்காயின், நீவர, மானீல, சங்க, மால்வரை, செறிந்த, கொட்கும், நன்மலை