திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார்.
நூல்
1. குறிஞ்சி
நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால் உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ ஏமரை போந்தன ஈண்டு. |
1 |
(பழையவுரை) நறைக் கொடி படர்ந்துயர்ந்தசந்தனங்களை அற வெட்டி நல்ல நாளால் மழை பெய்யுங்காலத்தையேற்றுக்கொண்டு வித்தி முதிர்ந்த ஏனலின் கண்,பிறையை யேற்றுக்கொண்டதொரு தாமரை மலரைப்போலும் வாண்முகத்தையும், தாழ்ந்த குழலையு முடையீர்!கண்டிலீரோ? ஏவுண்ட மறை போந்தனவற்றை இவ்விடத்து.
சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணால் கடிந்தான் உளன். |
2 |
நறவ மலரையுஞ் சுனை நீலமலரையும் அசோக மலரையும் கொய்துமுடித்து நின்மகள்குழலின் மேலே ஆராய்ந்து புனைவதுஞ் செய்து பின்னொருநாட்டுணிந்துபரணாற் காவலமையாத ஈர்ங்கடா யானையை மொட்டம்பாற்கடிந்து காத்தும் இப்பெற்றி யுதவி செய்தான்ஒருவனுளன்.
சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச் சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம் கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள் இமிழக் கிளியொழா ஆர்த்து. |
3 |
சந்தனங்களை வெட்டியுழுத சாரலின்கண்,வித்திய ஏனலின்கட் படிந்த கிளிகளை, சந்தனங்களைக்காலாக எறிந்து செய்த, பரண்மிசை யிருந்து, பூசியசாந்தம் எங்கும் பரந்து கமழ உலாவி, கடிகின்றகார்மயி லன்னாள் தான் வாய்திறந்து 'ஆயோ' என்றியம்புதலாற் றம்மின மென்று கிளிகள்ஆர்த்துப்போகா.
கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக் கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாள் மயிர். |
4 |
கோடாத புகழையுடைய மாறன்மதுரை யனையாளை அடாத பண்ணையுளுங் காண்கின்றிலேன்;போரின்கண் வாடாத கருங்கொற் றொழிலையுடைய வேல்மன்னர் அணிகலமாகிய முடிகூடின கொல்லோ! இடை யாற்கொம்பையனையாள் மயிர்கள்.
வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண்! |
5 |
கெடாத பனை யென்னுமளவு போன்ற அளவினையுடைய இன்ப விளைவினை நாமெண்ணியிருப்ப அதற்கிடையூறாக, நல்வினை விளையச் செல்வம்விளைவது போலப், பாத்தியின்கட் டினைவிளைதலான்,மையார் தடங்கண் மயிலன்னாய்! தினைகொய்ய நாட்சொல்லிவேங்கையார் நம்மை இங்குநின்றும் பிரிவித்தலைப்பாராய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, திணைமாலை, சாந்தம், நூற்றைம்பது, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், தடங்கண், மையார், மயிலன்னாய், கொல்லோ, என்றும், சங்க, நாளால், ஈர்ங்கடா