பதிற்றுப்பத்து - 50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெருவரு புனல் தார்
மா மலை, முழக்கின் மான் கணம் பனிப்ப, கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி, கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய; வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ, செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் |
5 |
காவிரி யன்றியும், பூ விரி புனல் ஒரு மூன்று உடன் கூடிய கூடல் அனையை! கொல்களிற்று உரவுத் திரை பிறழ, அவ் வில் பிசிர, புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர, விரவுப் பணை முழங்கு ஒலி, வெரீஇய வேந்தர்க்கு |
10 |
அரணம் ஆகிய, வெருவரு புனல் தார் கல் மிசையவ்வும், கடலவும், பிறவும், அருப்பம் அமைஇய அமர் கடந்து, உருத்த ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து, நல் இசை நனந் தலை இரிய, ஒன்னார் |
15 |
உருப்பு அற நிரப்பினை: ஆதலின், சாந்து புலர்பு, வண்ணம் நீவி, வகை வனப்புற்ற, வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து, கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து, |
20 |
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ, எவன் பல கழியுமோ-பெரும!-பல் நாள், பகை வெம்மையின், பாசறை மரீஇ, பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது, கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் |
25 |
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல் , இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, பிணி, புனல், மன்னவனது, கூறுதல், அவன், வேட்கையினும், மிகுத்துக், போர், வேட்கையை, விரி, கெழு, மென், வளம், மார்பு, முழங்கு, வண்ணம், சங்க, எட்டுத்தொகை, வண்ணமும், வெருவரு, தார், நாடு