சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய், ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம், நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே. |
241 |
வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம், மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும், சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே. |
242 |
மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே, ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று), ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ, பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே. |
243 |
வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென், மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில், ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே. |
244 |
பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின், குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும், பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே. |
245 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், பற்ற, இலக்கியங்கள், மாறி