சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால், ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள், கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால். |
236 |
நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம், தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால், ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே. |
237 |
வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய், ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும், பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே. |
238 |
இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம், பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா, உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே. |
239 |
புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே, உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே, பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய், நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம். |
240 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், எனவும், மேவி, இலக்கியங்கள், லாமையால்