சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால் மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே. |
231 |
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும் ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால் வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே. |
232 |
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே. |
233 |
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல் ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால். |
234 |
மாயாவாதி மத மறுதலை
ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென, மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய, பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின், தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே. |
235 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், தன்னை, தௌ¤, மாயா, இலக்கியங்கள், மின்றி