சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால் சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ சொல்லும் பொருளும் உடனின் றதெனின் சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே. |
211 |
சத்தப் பிரமவாதி மத மறுதலை
உரையா னதுமை யலினால் உலகேல் உரையாய் ஒருமை யலும்உள் ளதென வரையா துணரும் அதுவண் கதியேல் வரையா மறையோ டுமலைந் தனையே. |
212 |
அருவம் உரையா தலின்அவ் வுருவாய் மருவும் பரிணா மம்மறந் திடுமாம் பருகுந் ததியா னதுபா லதெனில் உருவம் அதுவாய் அழியும் உரையே. |
213 |
ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும் மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு மாய்நின் றமையின் உரையின் நலமும் ஆயும் பொருளுக் கறிநா மமதே. |
214 |
உரைபோல் பொருளுக் குருவின் மையினவ் உரையே பொருளென் றனைஇன் றரியென் உரையே கவிமா லவனுக் குளதாம் உரையாய் கவியா கவொர்மா லினையே. |
215 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, உரையே, சாத்திரங்கள், சித்தியார், பரபக்கம், சித்தாந்த, வரையா, பொருளுக், உரையாய், இலக்கியங்கள், பொருளென், சொல்லும், உரையா