சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம் தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின் மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே. |
81 |
சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்) தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென் போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம் தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே. |
82 |
எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால் எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத் தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத் தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே. |
83 |
உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து) உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம் உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே. |
84 |
உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின் மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே. |
85 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், உலகினைப், சிவஞான, சாத்திரங்கள், பரபக்கம், சித்தாந்த, ழக்குத், படைக்க, இலக்கியங்கள், நின்ற, இன்றாம்