சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஈசுவர வவிகாரவாதி சங்கற்பம்
ப·றுளைக் குடத்தி நுள்விளக் கேய்ப்ப வறிவுள தாகு முருவுறு முயிர்கள் கண்ணா லோசையுங் கந்தமுங் கருத வொண்ணா தென்னு முணர்வுடை மையினா லவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகள் செவ்விதி னிறுவிச் சேர்ந்தவை நுகரு மூல மலத்தின் பாகம்வந் துதவுழீஇ யிருடரு மிற்புக் கொருபொருள் கவரத் தீபம் வேண்டு மானவா போல மோக மாமலம் போக ஞான விளக்கர னருளாற் றுளக்கறப் பொருந்தி நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச் சலமில னாகிச் சார்ந்தவர்க் கென்று நலமிக நல்கு நாதனை யணைந்து பூழி வெம்மை பொருந்தா துயர்ந்த நீழல் வாழு நினைவினர் போலத் திருவடி நீழல் சேர்ந்து கருவுரு துயரங் களைந்திருந் திடுமே. |
ஈசுவர வவிகாரவாதி சங்கற்ப நிராகரணம்
இருந்ததுன் கேள்வி திருந்திடு முயிர்க ளறிவெனில் வாயிற் பொறிபுல னென்னை மற்றவை பற்றி யுற்றறிந் திடுதலி னறிவென வழங்கு முயிரென வுரைத்தல் காணுங் கண்ணினன் கைகொடு தடவிப் பூணும் பொருளின் பெயர்பல புகற லென்னுங் கிளவி தன்னொடு தகுமே யவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகளைச் செவ்விதி னிருவலி னறிவெனச் செப்பினை யறிவி லாமைகண் டனமணை புலற்குப் பொறிக ளேவலி னறிவொடு பொருந்திற் கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டு முதவிய தொன்றாற் கதுமென வியற்றின ருண்டோ வென்னிற் கண்டன மேனாட் கடவுளிற் கடிமலர் முடுகிய மதன னங்க மனங்கந் தங்கிடக் கிடந்தது வையின் றிரளிற் செய்ய சிறுபொறி மாட்டி மூட்டின தன்றே மீட்டுந் தேனமர் தவிசி னான்முக னுச்சி யறுத்ததுங் கருவி பொறுத்தோ வன்றே யீசன தியல்பு பேசுத றவிர்க காழி மாநகர்க் கவுணியர் கடவுண் ஞான மாகிய நற்பதி கங்க ளெழுதுறு மன்பர்த மின்புறு மொழியாற் களிறென வணைந்த கன்மப் புத்தன் முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே யென்றது மீர்வாள் கொன்றதென் பதுபோற் றனித்துணை யருளாற் றுணித்தன ரென்ப வாதலின் வாயி லளவினி லறிதலி லேதமி லறிவுயிர்க் கெய்துத லிலதே யிருட்கு விளக்கொன் றேந்தினர் போல மருட்கு ஞான மன்னுத லுளதே யென்றனை கருவிக ளியாவு மசேதனந் துன்றிய வுயிருந் துரியத் தன்மைய னாதலி னந்த ரனைவருங் கூடித் தீதற வருநெறி தெரியுமென் றற்றே நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச் சேர்ந்தவர்க் கின்பம் வாய்ந்திடு மென்றனை பாதவ மென்றுஞ் சேதன மின்மையின் இளைத்தோர் வம்மி னென்பதுந் துன்பம் விளைத்தோர் தம்மில் வெறுப்புமொன் றிலதே பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம் வெய்ய பூழியி னுள்ளுற வழுங்கி யாற்றுத லின்றி யாறியங் கினர்முன் றோற்றிடு மென்று சொல்லவு மிலதா லிவ்வகை கடவுட் கியம்புதல் தவறே பாச ஞானப் ப்ழிவழி யொழிக வீசன தருள்வழி யியம்புவன் கேண்மதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், நிராகரணம், சங்கற்ப, சாத்திரங்கள், சித்தாந்த, லனைய, நீர்நிழ, நீழல், வேண்டு, கடவுளைச், சீர்பெறு, புலன்கட், இலக்கியங்கள், ஈசுவர, வவிகாரவாதி, கவ்வப், செவ்விதி