நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தளையினியல்பு
கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும் மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் |
இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பெளவப்பரப்பழுந்திப் - பூவையர்தம் கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங் குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால் நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறும் சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை |
இறைவனது நிலை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ் செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா வேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போத அறிவிலறிவை யறியு மவர்கள் குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள் வெளியில் வெளியில் வெளியன் வெளியி லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில் அளவி லளவி லளவன் - அளவிறந்து நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற் சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற் றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக் கல்லாது தோன்றா வமல னகிலமெலா நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப் பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், விடு, சாத்திரங்கள், நெஞ்சு, சித்தாந்த, தூது, லொளொயி, லளியி, கொடுமை, இலக்கியங்கள், வெளியில்