நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூல்
இறைவனியல்பு
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் |
உயிரியல்பு
என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற் சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப் பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின் பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா உணர்வின் மிசையோ டுலகா யதனைப் புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற் கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத் தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல் வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும் உயிரின் றுயர முரையேன் - வயிரமே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தூது, நூல்கள், நெஞ்சு, சித்தாந்த, விடு, சென்று, சாத்திரங்கள், இலக்கியங்கள், எழுதப்பட்டது