நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.085.திருச்சோற்றுத்துறை

4.085.திருச்சோற்றுத்துறை
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
812 | காலை யெழுந்து கடிமலர் தூயன மேலை யமரர் விரும்பு மிடம்விரை சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை மாலை மதியமன் றோவெம் பிரானுக் |
4.085.1 |
காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம், நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளைஉடைய திருச்சோற்றுத்துறையாம். அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன் அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது.
813 | வண்டணை கொன்றையும் வன்னியு மத்தமும் கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் |
4.085.2 |
தொண்டர்கள் ,வண்டுகள் தங்கும் கொன்றை, வன்னி, ஊமத்தை, ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி, பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது.
814 | அளக்கு நெறியின னன்பர்க டம்மனத் விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை திளைக்கு மதியமன் றோவெம் பிரானுக் |
4.085.3 |
எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் ,அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய், தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர்களுடையபழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும், தேவர்தலைவராய், ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப்பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது.
815 | ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை பேர்ந்தகை மானிட மாடுவர் பின்னு சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் |
4.085.4 |
கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து, எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய், ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவபெருமான் கையில்ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன.
816 | கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் நீற்றிற் றுதைந்து திரியும் பரிசதும் ஆற்றிற் கிடந்தங் கலைப்ப வலைப்புண் சோற்றுத் துறையுறை வார்சடை மேலதொர் |
4.085.5 |
திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமான் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து, சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம்.
817 | வல்லாடி நின்று வலிபேசுவார்கோளர் கொல்லாடி நின்று குமைக்கிலும்வானவர் சொல்லாடி நின்று பயில்கின்றசோற்றுத் வில்லாடி நின்ற நிலையெம்பிரானுக் |
4.085.6 |
தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க, அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும்.
818 | ஆய முடையது நாமறி யோம்அர காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் |
4.085.7 |
எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனைநாம் அறியோம். முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அன்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளைஉடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும்.
819 | அண்ட ரமரர் கடைந்தெழுந் தோடிய உண்டு மதனை யொடுக்கவல் லான்மிக்க தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை இண்டை மதியமன் றோவெம் பிரானுக் |
4.085.8 |
பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய், மேலான இந்திரனும் திருத்தொண்டில்ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும்.
820 | கடன்மணி வண்ணன்கருதியநான்முகன் விடமணி கண்ட முடையவன் றானெனை சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை படமணி நாகமன் றோவெம் பிரானுக் |
4.085.9 |
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய், எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும், பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும்.
821 | இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக் கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த துலங்கன் மழுவினன் சோற்றுத்து றையுறை இலங்குமதியமன் றோவெம்பிரானுக் |
4.085.10 |
இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம்கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த, ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.085.திருச்சோற்றுத்துறை , பிரானுக்கழகியதே, திருச்சோற்றுத்துறை, பெருமானுடைய, அல்லவோ, சோற்றுத், அவருக்கு, றோவெம், அழகிதாகும், வந்து, நீண்ட, நின்று, பெருமான், திருச்சோற்றுத்துறைப், திருமுறை, பயில்கின்ற, அழகிய, பிறைச்சந்திரன், விளங்கும், தங்கும், மதியமன், சடைமேல், சோற்றுத்துறைப், அழித்த, கூத்து, திருச்சிற்றம்பலம், தேவர், அவன், நான்காம், தேவாரப், பதிகங்கள், ஏந்திய, பாம்பினை, பாம்பு, சந்திரன், ஒளிபொருந்திய, எம்பெருமானுக்கு, தொண்டர்கள், வீசும், அணிகலனாக, எழுந்து, மேல், அவர்களை, ஆராய்ந்து, தாடிய