நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.037.திருநெய்த்தானம்

4.037.திருநெய்த்தானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
364 | காலனை வீழச் செற்ற மேலவா யிருக்கப் பெற்றேன் கோலநெய்த் தான மென்னுங் நீலம்வைத் தனைய கண்ட |
4.037.1 |
கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன்.
365 | காமனை யன்றுகண் ணாற் தூமமுந் தீபங் காட்டித் சேமநெய்த் தான மென்னுஞ் வாமனை நினைந்த நெஞ்சம் |
4.037.2 |
மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.
366 | பிறைதரு சடையின் மேலே உறைதர வைத்த வெங்க நிறைதரு பொழில்கள் சூழ குறைதரு மடிய வர்க்குக் |
4.037.3 |
பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவினனாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான்.
367 | வடிதரு மழுவொன் றேந்தி பொடிதரு மேனி மேலே நெடிதரு பொழில்கள் சூழ அடிதரு கழல்க ளார்ப்ப |
4.037.4 |
சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார்.
368 | காடிட மாக நின்று பாடிய பூதஞ் சூழப் ஆடிய கழலர் சீரா கூடிய குழக னாரைக் |
4.037.5 |
கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே!
369 | வானவ வணங்கி யேத்தி தானவர்க் கருள்கள் செய்யுஞ் தேனமர் பொழில்கள் சூழத் கூனிள மதியி னானைக் |
4.037.6 |
தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!
370 | காலதிர் கழல்க ளார்ப்பக் ஞாலமுங் குழிய நின்று மேலவர் முகடு தோய மாலொரு பாக மாக |
4.037.7 |
திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.
371 | பந்தித்த சடையின் மேலே அந்திப்போ தனலு மாடி வந்திப்பார் வணங்கி நின்று சிந்திப்பார் சிந்தை யுள்ளார் |
4.037.8 |
முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.
372 | சோதியாய்ச் சுடரு மானார் ஓதிவா யுலக மேத்த ஆதியா யந்த மானார் நீதியாய் நியம மாகி |
4.037.9 |
ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.
373 | இலையுடைப் படைகை யேந்து தலையுட னடர்த்து மீண்டே சிலையுடன் கணையைச் சேர்த்துத் நிலையுடை யடிகள் போலு |
4.037.10 |
இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.037.திருநெய்த்தானம் , னாரே, கையில், நெய்த்தானத்தில், உறைகின்ற, கருள்கள், வணங்கி, திருநெய்த்தானம், பொழில்கள், திருமுறை, விரும்பி, கூத்து, உறைந்து, அணிந்த, கழல்கள், றறிகி, நிகழ்த்தும், திறத்தை, பெருமானார், முதலிய, பெருமான், விரும்பித், அவர்களுக்கு, கொண்டு, அறியாது, லேனே, கழல்க, அழகிய, குளிர்ந்த, அமைந்த, கோயின், திருச்சிற்றம்பலம், நான்காம், தேவாரப், பதிகங்கள், தியானிக்கும், நினைந்த, மேம்பட்ட, வண்டுகள், சோலைகள், சடையின்மேலே, சூழநின்றநெய்த், சூழப்பட்ட, சடையின், வைத்த, நிலைபெற்ற