நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.036.திருப்பழனம்

4.036.திருப்பழனம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
354 | ஆடினா ரொருவர் போலு கூடினா ரொருவர் போலுங் சூடினா ரொருவர் போலுந் பாடினா ரொருவர் போலும் |
4.036.1 |
திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும், மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும், கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார்.
355 | போவதோர் நெறியு மானார் வேவதோர் வினையிற் பட்டு கூவல்தா னவர்கள் கேளார் பாவமே தூர நின்றார் |
4.036.2 |
பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும், முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார். அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்ப தில்லை. ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன். நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீயவினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார்.
356 | கண்டராய் முண்ட ராகிக் தொண்டர்கள் பாடி யாடித் விண்டவர் புரங்க ளெய்த பண்டையென் வினைக டீர்ப்பார் |
4.036.3 |
வீரராய், மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தி, அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய், பகைவருடைய மும்மதில்களையும் அம்புஎய்து அழித்த வேதியராய், வேதம் ஓதும் நாவினராய்என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்துஎம்பெருமான் அமைந்து உள்ளார்.
357 | நீரவன் றீயி னோடு பாரவன் விண்ணின் மிக்க ஆரவ னண்ட மிக்க பாரகத் தமிழ்த மானார் |
4.036.4 |
பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார்.
358 | ஊழியா ரூழி தோறு பாழியார் பாவந் தீர்க்கும் ஆழியா னன்னத் தானு பாழியார் பரவி யேத்தும் |
4.036.5 |
எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான், ஊழிகளாய், ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய, சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார்.
359 | ஆலின்கீ ழறங்க ளெல்லா நூலின்கீ ழவர்கட் கெல்லா காலின்கீழ்க் காலன் றன்னைக் பாலின்கீழ் நெய்யு மானார் |
4.036.6 |
பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து, காலனைத்தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின், பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார்.
360 | ஆதித்த னங்கி சோம போதித்து நின்று லகிற் சோதித்தா ரேழுல குஞ் பாதிப்பெண் ணுருவ மானார் |
4.036.7 |
சூரியன், அக்கினி, சந்திரன், பிரமன், திருமால், புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள். இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள். பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதிபாகராக உள்ளார்.
361 | காற்றனாற் காலற் காய்ந்து தோற்றனார் கடலு ணஞ்சைத் ஏற்றினா ரிளவெண் டிங்க பாற்றினார் வினைக ளெல்லாம் |
4.036.8 |
காலினாலே கூற்றுவனை உதைத்து, யானைத்தோலைப் போர்த்தியவராய், அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான், கடலில் தோன்றியவிடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய், தோடு அணிந்த காதினராய், வெண்ணிறமுடைய காளையினராய், பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச்செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார்.
362 | கண்ணனும் பிரம னோடு எண்ணியுந் துதித்து மேத்த வண்ணநன் மலர்க டூவி பண்ணுலாம் பாடல் கேட்டார் |
4.036.9 |
பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து, தம்மை வாழ்த்தும்அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார்.
363 | குடையுடை யரக்கன் சென்று இடைமட வரலை யஞ்ச விடையுடை விகிர்தன் றானும் படைகொடை யடிகள் போலும் |
4.036.10 |
அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை, அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில், காளையை வாகனமாக உடைய, உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான், தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.036.திருப்பழனம் , னாரே, பழனத்து, எம்பெருமான், ரொருவர், உடைய, பெருமான், திருமுறை, உள்ளார், மானார்பழனத்தெம், எல்லாம், திருப்பழனம், பிரமனும், முயற்சியால், அடக்கி, திருமாலும், காலத்தில், சூழ்ந்த, கேட்டு, நின்று, பாய்ந்து, எங்கும், வினைக, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், போலும்பழனத்தெம், திருப்பழனத்து, அமைந்து, பாடி, ஐம்பொறிகளும், ஆவார், மேம்பட்ட