நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.020.திருவாரூர்

4.020.திருவாரூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
198 | காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் பூண்டுகொண் டொழிந்தேன் ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி தீண்டிவந் துலவுந் |
4.020.1 |
நெருங்கிய மாடங்கள் நீண்ட மாளிகைகள் இவற்றின்மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விரும்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக, உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விட்டேன். உன்மேல் ஆணை.
199 | கடம்படந்நட மாடினாய்களை கண்ணினக்கொரு ஒடுங்கி வந்தடைந்தே முடங்கிறான்முது நீர்மலங்கிள வாளைசெங்கயல் றடைந்த தண்கழனி |
4.020.2 |
வளைந்த இறால் மீன், பழைய நீர்ப்பள்ளத்தில் உறையும் மலங்கு, இளைய வாளைமீன், சிவந்த கயல்மீன்கள், சேல்மீன்கள், வரால் மீன்கள், களிறு என்ற மீன்கள் வந்து சேரும் குளிர்ந்த வயல்களை உடைய அழகிய ஆரூர்த் தலைவனே! பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே! அடைக்கலம் நல்குபவனாயுள்ள நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளில் உலகப் பற்றுக்கள் ஒடுங்க, வந்து அடைந்தேன். அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக.
200 | அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ உரிமையிற் றொழுவார் விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு தெருவினிற் பொலியுந் |
4.020.3 |
விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு, கோயில் பணி செய்பவர்கள். ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே!
201 | பூங்கழறொழு தும்பரவியும் புண்ணியாபுனி ஈங்கிருக் கப்பெற்றேன் ஓங்குதெங்கிலை யார்கமுகிள வாழைமாவொடு தீங்கனி சிதறுந் |
4.020.4 |
உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவு உயர்ந்த கமுகு மரம், இளவாழை, மா, மாதுளம், பலா என்பன இனிய பழங்களை உதிர்க்கும் திருவாரூர்த் தலைவனே! உன்னுடைய பொலிவை உடைய திருவடிகளைத் தொழுதும் முன் நின்று துதித்தும், புண்ணியனாய்ப் புனிதனாயுள்ள உன்னுடைய அழகிய திருவடிகள் என்னிடத்துத் தங்கப் பெற்றதனால் அடியேன் இனிவேறு யாது தேவையை உடையேன்? ஈங்கு - என்னிடம்.
202 | நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு ஆறுபாய வைத்தாய் ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட தேறல்பாய்ந் தொழுகுந் |
4.020.5 |
வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து, அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால், மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய், பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய். அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன்.
203 | அளித்துவந்தடி கைதொழுமவர் மேல்வினைகெடும் களித்துவந் துடனே குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் தாடுகோதையர் தௌக்குந் தீர்த்தமறாத் |
4.020.6 |
உலகிலுள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்புக் கொண்டு வந்து ஒரு சேரக்கூடி ஆட, அதனைக் கண்டு தாமும் விருப்பமுற்றவராய்க் கழுத்துவரை குளித்தும் தலை நனைய மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர்மேல் மற்றவர் வாரி இறைத்தும், நீரில் உட்புக்கு நீராடும் மகளிர் மயிர் முடிமீது அபிடேக நீர் தௌக்கப்படும் திருவாரூர்த் தலைவனே! அன்பு முதிரப் பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற அடியார்களுடைய வரக்கடவ வினைகளும் அழிந்து விடும் என்று நீ தெரிவிக்கின்றாய் ஆதலின் அடியவர் உன்னடிகளைத் தவறாது வணங்குகின்றனர்.
204 | திரியுமூவெயில் தீயெழச்சிலை வாங்கிநின்றவ பிரியுமா றெங்ஙனே பெரிய செந்நெற்பி ரம்புரிகெந்த சாலிதிப்பிய தரியுந் தண்கழனி |
4.020.7 |
உயர்வாகக் கூறப்படும் செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்ற பெயருடைய நெல்வகைகள் தம்மகத்து அறுவடை செய்யப்படும் குளிர்ந்த வயல்வளமுடைய அழகிய ஆரூர்த் தலைவனே! வானத்தில் உலவும் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு வில்லை வளைத்து நின்றவனே! என் உள்ளத்திலிருந்து நீ யாங்ஙனம் பிரிவாய்? மறந்தும் கூட நீ என்னை விடுத்து நீங்க உன்னை விடமாட்டேன்.
205 | பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந் துட றிறக்குமா றுளதே அறத்தையேபுரிந் தமனத்தனா யார்வச்செற்றக் திறத்தனா யொழிந்தேன் |
4.020.8 |
திருவாரூர் அம்மானே! இறந்தால் பிறந்தலும் பிறந்தால் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற நுணுகி வருந்தி இறக்குமாறும் உள்ளவே. அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய், அறத்தையே விரும்பிய மனத்தினேனாய், ஆசை, பகை, வெகுளி இவற்றை நீக்கி உன் அடிமைத் திறத்தில் ஈடுபட்டே னாய் உலகியற் செயல்களிலிருந்து நீங்கினேன்.
206 | முளைத்தவெண்பிறை மொய்சடையுடை யாயெப்போதுமென் வளைத்துக் கொண்டிருந்தேன் அளைப்பிரிந்தவ லவன்போய்ப்புகு தந்தகாலமுங் திளைக்குந் தண்கழனித் |
4.020.9 |
வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் வளையில் புகுந்த காலத்தை நோக்கிப் பெடை நண்டு அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூர் அம்மானே! பிறையை அணிந்த செறிந்த சடையனே! எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும் சுற்றிக்கொண்டிருந்த அடியேன் இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப்போக ஒருப்படேன்.
207 | நாடினார்கம லம்மலரய னோடிரணிய நாடிக் காணமாட்டாத் பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் தேடிக் கண்டுகொண்டேன் |
4.020.10 |
திருவாரூர் அம்மானே! தாமரை மலரில் உள்ள பிரமனோடு, இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய், நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.020.திருவாரூர் , ரம்மானே, திருவாரூர், தலைவனே, உடைய, வந்து, திருவாரூர்த், அழகிய, அடியேன், உயர்ந்த, குளிர்ந்த, திருமுறை, உன்னுடைய, உன்னை, அம்மானே, கொண்டு, கண்டு, நண்டு, உன்னைப், உள்ள, மார்பினை, புகுந்து, அதனைக், நின்று, பூண்ட, நீங்கினேன், வயல்களை, திருச்சிற்றம்பலம், நீண்ட, பதிகங்கள், தேவாரப், நான்காம், வானத்தில், உலவும், மீன்கள், என்னை, அணிந்த, உன்னைக், ஆரூர்த்