நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.110.திருத்தூங்கானைமாடம்

4.110.திருத்தூங்கானைமாடம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1028 | பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் |
4.110.1 |
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கானை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப்பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
1029 | ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் |
4.110.2 |
செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! 'ஐயோ' இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்ற திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப்பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
1030 | கடவுந் திகிரி கடவா தொழியக் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் கடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந் |
4.110.10 |
பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக்கொள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.110.திருத்தூங்கானைமாடம் , அடியேன், திருமுறை, பெரிய, கடந்தையுட், டூங்கானை, திருத்தூங்கானைமாடம், அடியேனை, பொறித்து, நான்காம், தேவாரப், உறையும், உன்னுடைய, பதிகங்கள், தூங்கானை, மாடத்தில், திருச்சிற்றம்பலம்