நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.109.திருமாற்பேறு

4.109.திருமாற்பேறு
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
1026 | மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன காணிக் கிரந்தவன் காண்டற் கரியன பேணிக் கிடந்து பரவப் படுவன மாணிக்க மாவன மாற்பே றுடையான் |
4.109.1 |
மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன. மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன. ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன. மாணிக்கம் போன்று ஒளி வீசுவன. மேலும் வீடுபேற்றை நல்குவன.
1027 | கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம வருடச் சிவப்பன மாற்பே றுடையான் |
4.109.2 |
கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன. அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.109.திருமாற்பேறு , திருமாற்பேறு, திருமுறை, திருவடிகள், திருமால், வீசுவன, காண்பதற்கு, றுடையான்மலரடியே, காண்டற், நான்காம், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், மாற்பே