சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 20
2 அண்ணகனின் ஆசையுணர்வு சிறுமியின் கன்னிமையை அழிக்கும்.
3 அதுபோலவே நீதியற்ற தீர்ப்பைச் சொல்லுகிறவனும் அக்கிரமமான நீதி செலுத்துகிறான்.
4 கண்டிக்கப்பட்ட போது மனவருத்தம் காண்பிப்பது எவ்வளவோ நலமானது. அப்போது தான் மனம் பொருந்திச் செய்யும் குற்றத்தைத் தவிர்ப்பாய்.
5 ஞானியாகக் கண்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறவன் மௌனமாய் இருக்கிறான். பேசுகிறதற்குத் துடிக்கிறவன் பகைக்கப்பட வேண்டியவன்.
6 பேசும் திறமை இல்லாததால் மௌனமாய் இருக்கிறவனும் உண்டு@ தகுந்த காலம் அறிந்து மௌனமாய் இருக்கிறவனும் உண்டு.
7 ஞானமுள்ள மனிதன் சமயம் கிடைக்குமட்டும் மௌனமாய் இருப்பான். அற்பனும் அவிவேகியுமோ சமயத்திற்குக் காத்திரார்.
8 பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துகிறான். அநியாயமாய் அதிகாரத்தை அபகரித்துக் கொள்கிறவன் பகைக்கப்படுவான்.
9 தீநெறியாளனான மனிதனுக்குத் தீமைகளில் வெற்றி உண்டு. ஆனால், அந்த வெற்றியே அவனுக்குக் கேடாகின்றது.
10 பயனற்ற ஈகையும் உண்டு@ இரு மடங்கு வெகுமதி அளிக்கக் கூடிய ஈகையும் உண்டு.
11 மகிமையைப் பற்றியே ஒருவன் இழிவடைகிறான். தாழ்மையினாலேயே ஒருவன் தலையெடுக்கிறான்.
12 உதவாத பலவற்றைச் சொற்ப விலைக்கு வாங்கிப் பிறகு ஏழு மடங்கு அதிகமாய்ச் செலவு செய்கிறவனும் உண்டு.
13 ஞானி தன் வார்த்தைகளினால் தன்னைத் தானே பிறருக்கு விருப்பமாக்கிக் கொள்கிறான். மூடருடைய பரிவுகள் வீணாகின்றன.
14 அறிவிலியினுடைய ஈகை உனக்கு விருப்பப்படாது. ஏனென்றால், அவனுக்கு ஏழு கண்கள் உண்டு.
15 கொஞ்சமாய்க் கொடுப்பவன் வெகுவாய்ச் சொல்லிக் காட்டுவான். அவன் வாய் திறப்பதே நெருப்பு மூட்டுவதாகின்றது.
16 ஒருவன் இன்றைக்குக் கடன் கொடுத்து நாளைக்குக் கேட்பான். இத்தகைய மனிதன் பகைக்கு உகந்தவன்.
17 மூடனுக்கு நண்பன் இல்லை. அவன் நற்செயல்களினால் யாருக்கும் விருப்பு உண்டாவதில்லை.
18 ஏனென்றால், அவன் அப்பத்தை உண்கிறவர்கள் பொய்யான நாவுள்ளவர்கள். அவர்கள் எத்தனை முறை எவ்வளவு அவனைக் கேலி செய்கிறார்கள்!
19 ஏனென்றால், தான் மீதி வைக்க வேண்டியதையும், அப்படி மீதி வைக்கத் தேவையில்லாததையும் தகுந்த விவேகத்துடன் செலவிடவில்லை.
20 பொய்யான நாவினால் வரும் கேடு உயர இருந்து கட்டாந்தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது. இவ்வாறே தீயோருடைய இழிவு வெகு விரைவில் வரும்.
21 ஆத்திரக்காரனான மனிதன் வீணான கதையைப் போல நெறியற்றவர்களுடைய வாயில் அடிக்கடி வருவான்.
22 மூடனுடைய வாயில் நீதிமொழி நிந்திக்கப்படும். ஏனென்றால், அதைக் காலம் அறிந்து அவன் சொல்வதில்லை.
23 வசதியில்லாததனால் குற்றம் செய்யத் தவறுகிறவன் உண்டு. அவன் அயர்ந்திருக்கையில் தூண்டப்படுவான்.
24 வெட்கத்தை முன்னிட்டுத் தன் ஆன்மாவை இகழ்கிறவனும் உண்டு. அவிவேகியான மனிதன் அதைப் போக்கடிக்கிறான்@ மனிதரின் முகத் துதிக்காகத் தன்னை இழந்து போகிறான்.
25 வெட்கத்தினால் நண்பனுக்கு வாக்குறுதி கொடுக்கிறவன் காரணமின்றி அவனைப் பகைவனாக்கிக் கொள்கிறான்.
26 மனிதனிடம் பொய்மை நிந்தைக்குரியது. ஆனால், தீநெறியாளர் வாயில் அது ஓயாமல் வரும்.
27 அடிக்கடி பொய் சொல்லுகிறவனை விடத் திருடன் தாவிளை. ஆனால், இருவருமே அழிவார்கள்.
28 பொய்யருடைய நடத்தை மேன்மை அற்றதாய் இருக்கின்றது. அவர்களிடம் வெட்கம் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.
29 ஞானி வார்த்தைகளினால் தன்னை வெளிப்படுத்துவான். விவேகி பெரியோருக்குப் பிரியப்படுவான்.
30 தன் நிலத்தில் பாடுபடுகிறவன் விளைச்சல்களின் குவியலைச் சேர்ப்பான். நீதியை நிறைவேற்றுகிறவன் உயர்த்தப்படுவான். பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்தைத் தவிர்ப்பான்.
31 கையூட்டுகளும் வெகுமதிகளும் நீதிபதிகளுடைய கண்களைக் குருடாக்குகின்றன. அவை ஊமையனைப் போல் அவர்கள் கண்டனங்களை அகற்றும்.
32 மறைக்கப்பட்ட ஞானத்தாலும் காணப்படாத செல்வத்தாலும் வரும் பயன் என்ன?
33 தன் ஞானத்தை மறைக்கிறவனை விடத் தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் மேலானவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, உண்டு, ஏற்பாடு, அவன், வரும், ஏனென்றால், மௌனமாய், மனிதன், பழைய, ஆகமம், வாயில், சீராக், ஒருவன், போது, மீதி, பொய்யான, இருக்கிறவனும், தான், அடிக்கடி, பெரியோருக்குப், விடத், தன்னை, திருவிவிலியம், கொள்கிறான், உண்டு@, ஆன்மிகம், அறிந்து, காலம், ஈகையும், மடங்கு, வார்த்தைகளினால், ஞானி, எவ்வளவோ, தகுந்த