18. சிவலோக வகுப்பு - திருவகுப்பு
உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில் |
1 |
உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன் |
2 |
உபநிட முடிவினும் இடபம தனிலுமு யங்கிவ யங்குஞ் சீர்ப்பதி யொன்றென் றவிதாஎன |
3 |
உறைவிடு படையினன் அடலுடை நிசிசரர் தண்டமு டைந்தங் கார்ப்பெழ வங்கம் பொருசேவகன் |
4 |
வரபதி சுரபதி சரவண மடுவினில் வந்தருள் கந்தன் கார்த்திகெ யன்செங் கழுநீர்மலர் |
5 |
மழுவிய குருபரன் வனசரி பதயுக கஞ்சம்வ ணங்கும் பாக்யக தம்பன் கருணாகரன் |
6 |
வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தனெ னுஞ்செஞ் சேக்கையி லுங்கண் துயில்மால்திரு |
7 |
மருமகன் இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி பண்கொண் டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை |
8 |
அருவுரு ஒழியஓ ரபிநவ வடிவரு ளுந்தனி யந்தந் தீ¨க்ஷயெ னுங்குண் டலபூஷணம் |
9 |
அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுண மஞ்சினு மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம் |
10 |
அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் அம்பொன் சேர்த்தக லிங்கஞ் சயசாரமும் |
11 |
அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும் |
12 |
இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம் இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம் |
13 |
எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுர |
14 |
சிமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம் றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம் |
15 |
இருவினை கெடஒரு நிரமய பரமவு னந்தரும் இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே. |
16 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
18. சிவலோக வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் -