பாடல் 997 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதானா |
தோடு மென்குழை யூடே போரிடு வாணெ டுங்கயல் போலே யாருயிர் சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார் சூத கந்தனி லேமா லாயவர் ஓது மன்றறி யாதே யூழ்வினை சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே ஆடு வெம்பண காகோ தாசன மூறு கண்டிட மேல்வீழ் தோகையி லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே ஆரு நின்றரு ளாலே தாடொழ ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே ஓடு வெங்கதி ரோடே சோமனு மூழி யண்டமும் லோகா லோகமு மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண ஊழி டம்புயன் வேலா வாலய மூடு தங்கிய மாலா ராதர வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய் மேக மென்குழ லாய்நீ கேளினி வேறு தஞ்சமு நீயே யாமென வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 997 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொடிய, போல், தானன, தந்தன, தானா, உடைய, இருந்த, கொண்டவனாய், பெருமாளே, போலே, வேடர்கள், நீயே, மெல்லிய