பாடல் 984 - இராமேசுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான |
வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர் மீதே பணிக்கும்வகை ...... யறியாதே மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி லூடே யணைத்துதவு ...... மதனாலே தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக ளேதோ வெனக்கலவி ...... பலகோடி தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி னூடே கிநிற்குமிரு ...... கழலோனே மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை வீரா குறச்சிறுமி ...... மணவாளா ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை நாணா துரைக்குமொரு ...... பெரியோனே நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு ராமே சுரத்திலுறை ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 984 - இராமேசுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தனத்ததன, போரில், பெரியோனே, பெருமாளே