பாடல் 98 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - காம்போதி /
ஸஹானா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தனனா தனந்த ...... தனதான |
வரியார் கருங்கண் ...... மடமாதர் மகவா சைதொந்த ...... மதுவாகி இருபோ துநைந்து ...... மெலியாதே இருதா ளினன்பு ...... தருவாயே பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே பரமே சுரன்ற ...... னருள்பாலா அரிகே சவன்றன் ...... மருகோனே அலைவா யமர்ந்த ...... பெருமாளே. |
வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு, பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல், உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக. காத்து ரட்சித்து அருள் செய்பவனே, பரமசிவன் தந்தருளிய குழந்தையே, ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே, திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 98 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே