பாடல் 976 - திருக்குற்றாலம் - திருப்புகழ்

ராகம் - . ரஞ்சனி
தாளம் - தி.ர த்ருபுடை
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான |
வேதத்திற் கேள்வி யிலாதது போதத்திற் காண வொணாதது வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் வீதித்துத் தேடரி தானது ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் வாதத்துக் கேயவி யாதது காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே காதத்திற் காயம தாகும தீதித்தித் தீதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே கோதைப்பித் தாயொரு வேடுவ ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே. |
* திருக்குற்றாலம் தென்காசிக்கு மேற்கே 4 மைலில் உள்ளது.நடராஜ மூர்த்தி நடனம் ஆடிய ஐந்து சபைகளில் சித்ர சபை இங்குள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 976 - திருக்குற்றாலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தானத்தத், நற்கதியை, செயல், தூரம், உள்ளது, பெருமாளே, வொணாதது, காதத்திற், அளவு