பாடல் 949 - பேருர் - திருப்புகழ்

ராகம் - சாருகேசி
தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2
தானாத் தனதான தானாத் ...... தனதான |
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. |
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.
* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 949 - பேருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, தனதான, தானாத்