பாடல் 943 - அவிநாசி - திருப்புகழ்

ராகம் - காபி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதானத் தனதான தனதானத் ...... தனதான |
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. |
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 943 - அவிநாசி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தும், வரம், பெருமாளே, தனதான, தனதானத்