பாடல் 930 - நெருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
குருவு மடியவ ரடியவ ரடிமையு மருண மணியணி கணபண விதகர குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் மருவு முலையெனு மலையினி லிடறியும் அளக மெனவள ரடவியில் மறுகியு மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே வயலி நகரியி லருள்பெற மயில்மிசை யுதவு பரிமள மதுகர வெகுவித வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு மருது நெறிபட முறைபட வரைதனில் உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி கவிகை யிடவல மதுகையு நிலைகெட வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு நிருப ரணமுக வரசர்கள் வலிதப விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே. |
* நள கூபரர் என்ற கந்தர்வர்கள் சபிக்கப்பட்டு மருதமரமாக கோகுலத்தில் வளர்ந்தனர். கண்ணன் உரலுடன் தவழ்ந்து மோதி மருத மரத்தையும் சாபத்தையும் முறியடித்தான்.
** 'நெருவை' என்னும் 'நெரூர்' (நெருவூர்) கருவூருக்கு (அதாவது கரூர்) அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 930 - நெருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, இல்லாதவன், என்னும், நிலையிலும், கொண்ட, கடலினில், உள்ள, தவழ்ந்து, அரசர்களும், நெருவை, நான், உடைய, பெருமாளே, மனம், இருக்கும்