பாடல் 901 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - : தாளம் -
தானதன தாத்த தானதன தாத்த தானதன தாத்த ...... தனதான |
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி யாடையணி காட்டி ...... அநுராக ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி ஆதரவு காட்டி ...... எவரோடும் ஈரநகை காட்டி நேரமிகை காட்டி யேவினைகள் காட்டி ...... யுறவாடி ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி யீடழிதல் காட்ட ...... லமையாதோ வீரவப ராட்டு சூரர்படை காட்டில் வீழனலை யூட்டி ...... மயிலூர்தி வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு வேலைவிளை யாட்டு ...... வயலூரா சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலிகுற வாட்டி ...... மணவாளா தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 901 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தானதன, கொண்ட, தாத்த, வயலூர், காட்டில், நாட்டில், பெருமாளே