பாடல் 889 - திருநெய்த்தானம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன ...... தனதான |
முகிலைக் காரைச் சருவிய குழலது சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ முனையிற் காதிப் பொருகணை யினையிள வடுவைப் பானற் பரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ் பருகிக் காதற் றுயரற வளநிறை துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே குழறிக் கூளித் திரளெழ வயிரவர் குவியக் கூடிக் கொடுவர அலகைகள் குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநட மிடுபவர் செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி தழுவிய திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே. |
* திருநெய்த்தானம் திருவையாறுக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 889 - திருநெய்த்தானம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானத், தனனத், மாலை, தாமரை, பெருமாளே, ஒத்த, கூடி, போர், ஒன்று, பறைகள், இரண்டு, சூழத், நிறைந்த, கூடிக், கூடித், பணியணி, சமர்செயு, தாமத், குகுகுக், கூகுக், செகசெச், தீதித், திமிதித், குகுகுகு, சேசெச்