பாடல் 863 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் ...... தனதான |
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட் டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற் றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக் கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. |
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 863 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தந்ததனத், கொண்ட, உடைமை, தானதனத், வீசும், ஆதல், டாடுடுடிட், திந்ததிமித், தீதகுடட், டுண்டுமிடட், பெருமாளே