பாடல் 860 - திருவிடைமருதூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான |
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும் தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந் திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங் குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித் தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன் பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம் பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங் கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின் றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங் கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம் பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங் கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங் கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென் றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே. |
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 860 - திருவிடைமருதூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், தனதனன, விளங்கும், பார்த்து, கூடி, தந்தனம், வழியில், வந்து, வந்த, தம்பிரானே, கொண்ட, அழகு, நான்