பாடல் 86 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - பேகடா;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா |
மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே கனைக்குந்தண் கடற்சங்கங் கரத்தின்கண் தரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும் கதித்தொண்பங் கயத்தன்பண் பனைத்துங்குன் றிடச்சந்தங் களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய் தினைக்குன்றந் தனிற்றங்குஞ் சிறுப்பெண்குங் குமக்கும்பந் திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 86 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தந், என்றும், எனது, கொண்டு, தங்கியுள்ள, பெருமாளே, வேறு, ஐந்து