பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ்

ராகம் -
மனோலயம் - மத்யம ஸ்ருதி
தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24
தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த தான தான தத்த தந்த ...... தனதான |
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன் வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே. |
* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் - சிவ புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கந்த, தத்த, பெருமாளே, கொண்ட, மாறி, தந்த, புராணம், தேர், சிவன், கொண்டு, னப்ப, னாலெ, கொள்ளும்