பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன ...... தனதான |
பாட கச்சிலம் போடு செச்சைமணி கோவெ னக்கலந் தாடு பொற்சரணர் பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் பார பொற்றனங் கோபு ரச்சிகர மாமெ னப்படர்ந் தேம லிப்பரித மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ டாட ளிக்குலம் பாட நற்றெருவி லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம் வாரு முற்பணந் தாரு மிட்டமென ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ சேட னுக்கசண் டாள ரக்கர்குல மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி யோர்கள் கட்டியம் பாட எட்டரசர் சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா நாட கப்புனங் காவ லுற்றசுக மோக னத்திமென் தோளி சித்ரவளி நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல் நாய கிக்குநன் பாக ரக்கணியும் நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே. |
* வைத்தீசுரன் கோயில் முருகனுக்கு முத்துக் குமரர் என்று பெயர்.
** தையல்நாயகி என்பது வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் உமா தேவியின் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தாடு, பாடி, தத்தனந், தத்ததன, மலையில், கொடுங்கள், வள்ளி, என்னும், வைத்தீசுரன், மிகுந்த, பெயர், இருக்கும், அணிந்துள்ள, பெருமாளே, பேசி, போடு, ஒன்று, தாளம், நல்ல, இன்பகரமான, விளையாடும்