பாடல் 765 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
இரத மான தேனூற லதர மான மாமாத ரெதிரி லாத பூணார ...... முலைமீதே இனிது போடு மேகாச உடையி னாலு மாலால விழியி னாலு மாலாகி ...... யநுராக விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும் விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர் அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர் அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற் புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதி புரண பூர ணாகார ...... முருகோனே புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே. |
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 765 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, மூடர்கள், என்னும், தானான, நல்ல, மற்ற, சண்பை, முனிவர், சீகாழி, மயக்கம், யாமூடர், னாலு, லாமூடர், பரவி, பெருமாளே, புகலி, உடைய