பாடல் 747 - திருவேட்களம் - திருப்புகழ்

ராகம் - பெஹாக்
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன ......தனதான |
சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி சரணக்கழல் காட்டியெ னாணவ மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் கதிர்சுற்றுக நோக்கிய பாதமு மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே சிதறத்தரை நாற்றிசை பூதர நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி மூத்தவி நாயகி செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே. |
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்)* குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 747 - திருவேட்களம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், நோக்கிய, உள்ள, தனனத்தன, நான்கு, தானன, தாத்தன, பெருமாளே, கொண்ட, பெயர்களும், உரிய, பெரிய, கமலம், பார்வதி, ஆகிய, காட்டி, என்னும், மலைகள்