பாடல் 742 - திருத்துறையூர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன ...... தனதான |
வெகுமாய விதத்துரு வாகிய திறமேப ழகப்படு சாதக விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி வினையான கருக்குழி யாமெனு மடையாள முளத்தினின் மேவினும் விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல் தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச் சதிகாரர் விடக்கதி லேதிரள் புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ உககால நெருப்பதி லேபுகை யெழவேகு முறைப்படு பாவனை யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி உலவாந ரகுக்கிரை யாமவர் பலவோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித் தொகலாவ தெனக்கினி தானற வளமாக அருட்பத மாமலர் துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா துதிமாத வர்சித்தர்ம கேசுரர் அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே. |
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 742 - திருத்துறையூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானன, தனத்தன, நான், திருவருள், நெருப்பில், பெருமாளே, கருக்குழி, என்கின்ற, பெரிய