பாடல் 732 - தச்சூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தத்தா தனத்தான தாத்தத் தனந்த தத்தா தனத்தான தாத்தத் தனந்த தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான |
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன் மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித் தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள் தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே. |
* எக்காலும் அழியாத வரத்தைப் பெற்று சூரன் மாமரமாக போருக்கு வந்தான். அத்தகைய மாமரத்தை முருக வேள், வேலால் இரு கூறுகளாகப் பிளந்தார். அந்த மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு தச்சனைப் போல் மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினார்.
** தச்சூர் வடக்காகும் திசையில் ஆண்டார்குப்பம் என்ற பிரபல முருகத்தலம் சென்னைக்கு வடக்கே உள்ள பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 732 - தச்சூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், இல்லை, தச்சூர், கொண்ட, தனந்த, தனத்தான, தாத்தத், தத்தா, உனக்கு, யாரும், இருக்கும், வடக்கே, போய், கொண்டு, விட்டாய், படிந்து, பிளந்த, திரிவேனோ, பெருமாளே, மனம், பேசி, எனக்கு, இப்போது