பாடல் 729 - திருவாமாத்தூர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான |
கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது நன்க மைக்கின மாமாமென ...... முகையான கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. |
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 729 - திருவாமாத்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தந்த, பெரிய, தத்தன, தானாதன, வாய்ந்த, பெரும், உடைய, எனவும், என்றும், யானையின், பெருமாளே