பாடல் 727 - சிறுவை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன ...... தனதான |
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள் காத லின்பொருள் மேவின பாதகர் வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி வேளை யென்பதி லாவசை பேசியர் வேசி யென்பவ ராமிசை மோகிகள் மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும் மால யன்பர னாரிமை யோர்முனி வோர் புரந்தர னாதிய ரேதொழ மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி யேவி ரும்பி வினாவுட னேதொழ வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே நீல சுந்தரி கோமளி யாமளி நாட கம்பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ காம சுந்தரி யேதரு பாலக நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற மாநி லங்களெ லாநிலை யேதரு ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே ஆட கம்பயில் கோபுர மாமதி லால யம்பல வீதியு மேநிறை வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே. |
* சிறுவாபுரியில் உள்ள திருமாலுக்கு 'திருவூரகப் பெருமாள்' என்று பெயர்.
** சிறுவைத்தலம், சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 727 - சிறுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, பெரிய, சுந்தரி, தந்தன, சிறந்த, பெற்ற, ஆகிய, கோயில், உள்ளது, பெயர், விளங்கும், உடைய, சிறியேனும், மீது, கம்பயில், நாரணி, பெருமாளே, யேதரு, விலைமாதர்கள்